கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.
சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் ரிலீஸ் விழா பிரம்மாண்டமாக நடந்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸுக்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் மொத்தம் 173 நிமிடங்கள் ஓடும் எனவும் அமெரிக்காவில் ஜூன் 2 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கே பிரிமீயர் காட்சி திரையிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் திரைப்படம் 5 மொழிகளில் ரிலீஸாக உள்ள நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கமல் தனது கதாபாத்திரத்துக்கு தானே டப்பிங் பேசியுள்ளாராம். பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பேசி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.