சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை பெருவெள்ளம் மற்றும் புயல் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வேளச்சேரி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் நயன்தாராவின் பெமி 9 என்ற நிறுவனத்தின் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் உணவுப் பொருட்கள் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டன.