தமிழர்கள் பிச்சைக்கார்கள்: நயன்தாரா தோழியின் சர்ச்சை பதிவுக்கு பதிலடி!!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (11:03 IST)
ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணா. இவர் 7 ஆம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 


 
 
கர்னாடகாவை சேர்ந்த இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது As I'm Suffering From Kadhal என்ற வெப் சீரியலில் நடித்துவருகிறார். இது ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. 
 
சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணி போட்டியிட்ட ஐபிஎல் தொடரின் போது இவர் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாரு ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். 
 
"தமிழர்கள் பிச்சைக்காரர்கள், தண்ணீருக்கு பிச்சை எடுக்குறீர்கள், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்குறீங்க, இப்போ எங்க சிட்டியை (பெங்களுரு) ஆக்ரமித்து கொச்சை படுத்திட்டீங்க. உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையாடா?" என பதிவிட்டிருந்தார்.
 
இந்த பதிவுக்கு பின்னர் தமிழக மக்கள் அவரை வலைதளத்தில் வறுத்தெடுத்தனர். அதனால் அவர் இனி தமிழ்நாடு பக்கம் வரவே மாட்டேன் என கூறியிருந்தார்.
 
ஆனால், அதை அவர் மறந்து இருந்தாலும் நமது மக்கள் மறவாமல், இப்போ எதற்கு தமிழ்நாடு பக்கம் வந்தீங்க? என மீண்டும் அவரை இணையதளத்தில் வறுத்தெடுக்க துவங்கியுள்ளனர். 
 
அடுத்த கட்டுரையில்