ஒரு மாதத்திற்கு பிறகு வீடு திரும்பிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (09:14 IST)
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பதும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே

அண்மையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தனி விமானத்தில் கொச்சி சென்று அங்கு நயன்தாராவின் வீட்டில் ஓணம் கொண்டாடினர். கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று மிக விமர்சையாக கொண்டாடப்படுவதை அடுத்து நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் நெருக்கமாக ரொமான்டிக் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி முடித்து விட்டு இருவரும் அங்கிருந்து கோவாவிற்கு சென்றனர். கோவாவில் விக்னேஷ் சிவனின் பிறந்தாளை நயன் சிறப்பாக கொண்டாடி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அந்த ரொமான்டிக் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தற்ப்போது சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு தனி விமானத்தில் சென்னை திரும்பியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது. நயன்தாரா குட்டி பாப்பா போன்று டீ ஷர்ட் ஸ்கர்ட் அணிந்துகொண்டு விக்கி கையை கோர்த்தபடி விமானத்தில் இருந்து இறங்கி வரும் இந்த புகைப்படம் சிங்கிள் புல்லிங்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்