நயன்தாராவுடன் நியூயார்க்கில் பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ் சிவன்

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (13:04 IST)
இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் நியூயார்க்கில் கொண்டாடி வருகிறார். 

 
‘போடா போடி’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கியபோது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்து, இருவரும் லிவிங் டு கெதராக வாழ்ந்து வருவதாக  கூறப்படுகிறது.

 
இந்நிலையில், இன்று விக்னேஷ் சிவனுக்குப் பிறந்தநாள். தன்னுடைய பிறந்த நாளை, காதலி நயன்தாராவுடன் நியூயார்க்கில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். இவர் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம், பொங்கலுக்கு  ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்