இனிமேலாவது திருந்துவாரா நாட்டாமை?

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (15:51 IST)
தொடர்ச்சியாக அரசியலில் பல அடிகளை வாங்கிய பின் நாட்டமை நடிகர் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.


 

 
‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்பார்கள். ஆனால், எத்தனை முறை சூடுபட்டாலும் நாட்டாமை நடிகருக்கு மட்டும் சொரணையே வராது போல. அம்மையார் இருந்தவரை நீக்குபோக்கு காட்டி அரசியல் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தவருக்கு, அம்மையாரின் இறப்புக்குப் பிறகு ஆப்பு மேல் ஆப்பு. அவர் வீட்டில் ரெய்டு, மனைவியின் அலுவலகத்தில் ரெய்டு என அடுத்தடுத்து அதிர்ச்சிகளைக் கொடுத்து வருகிறது மத்திய அரசு.
 
எனவே, இனிமேல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் நாட்டாமை. அவர் வயதுக்கும், உடலுக்கும் போலீஸ் வேடம்தான் சரியாக இருக்கும் என்பதால், அந்த வேடங்களாகப் பார்த்து நடிக்கத் தொடங்கியிருக்கிறாராம். சில வருடங்களுக்கு முன்பு மலையாளப் படத்தின் ரீமேக்கில் ட்ராபிக் போலீஸ் கமிஷனராக நடித்தாரல்லவா? அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார்கள். ராஜேஷ் குமார் எழுதிய க்ரைம் கதையில், துப்பறியும் போலீஸாக நடிக்கிறார். இனிமேலாவது புத்தியோட பொழைச்சிக்குங்க நாட்டாம…
அடுத்த கட்டுரையில்