அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் டெல் கணேசன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், ‘டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார். இந்தப் படத்தை, எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சாம் லோகன் கலேகி இயக்குகிறார்.
இந்தப் படத்தில், அருங்காட்சியகப் பொறுப்பாளர் என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நெப்போலியன். அமானுஷ்யங்கள் நிறைந்த இந்தப் படத்தில் ஜெஸ்ஸி டீன், ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளரான தேவன் ஏகாம்பரமும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.