மாஸ்டர் வில்லன்… விஜய் சேதுபதிக்கு முன் இவர்தான் – அட நல்லா இருக்குமே!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (09:37 IST)
மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி தேர்வாவதற்கு முன்னர் நடிகர் நானிதான் ஆப்ஷனில் இருந்தாராம்.

தமிழ் சினிமாவில் இப்போது நடிக்கும் நடிகர்களில் பன்முகத்திறமைக் கொண்டவர் என்றால் அது விஜய் சேதுபதிதான். ஹீரோவாக நடிக்கும் அதே நேரத்தில் வில்லனாகவும் நடிக்கும் துணிச்சல் உள்ளவர். அவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்த நிலையில் இப்போது விஜய்க்கும் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் அவர் நடித்துள்ள பவானி கதாபாத்திரத்தில் அவர் தேர்வாவதற்கு முன்னதாக நானிதான் பட்டியலில் இருந்தாராம். தெலுங்கு நடிகரான நானியை படத்தில் வைத்தால் தெலுங்கிலும் நல்ல கவனம் கிடைக்கும் என்பதால் அந்த முடிவை எடுக்க இருந்தார்களாம். ஆனால் விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்தால் நானி நடிக்க முடியாமல் போனதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்