என் கனவு கடைசி வரை நிறைவேறவில்லை: நமீதா

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (20:40 IST)
பிக்பாஸ் 1, திருமணம், புதிய படங்களில் ஒப்பந்தம் என கடந்த சில மாதங்களாகவே நடிகை நமீதாவின் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது நெடுநாள் ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று தனது நீண்ட நாள் ஆசை என்றும், ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை என்றும் நடிகை நமீதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் இரண்டு இயக்குனர்கள் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். 'தி அயர்ன் லேடி' என்ற டைட்டிலில் இயக்குனர் பிரியதர்ஷினி இயக்குவதாகவும், இந்த படத்தில் நித்யாமேனன், ஜெயலலிதா கேரக்டரிலும், வரலட்சுமி, சசிகலா கேரக்டரிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் படம் குறித்து மேல்தகவல் எதுவும் இல்லை.
மேலும் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்