சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு.. படப்பிடிப்பு எப்போது?

Siva

வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (19:01 IST)
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இருவரும் இணையும் புதிய திரைப்படத்தை, முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'தி கோட்' படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியான பிறகு, சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
 
தற்போது சிவகார்த்திகேயன் 'மதராஸி' படத்தில் நடித்துள்ள அந்த படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் வெங்கட் பிரபுவுடன் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
டைம் டிராவல் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படம், சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்