அரசியல்வாதிகளிடம் இருந்து கமல்ஹாசனை பாதுகாப்போம்: விஷால்

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (22:03 IST)
கடந்த சில நாட்களாக அரசியல்வாதிகளால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். நேற்று முதல்வரே கமல்ஹாசனின் பேட்டிக்கு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இந்த விஷயம் சீரியஸாக சென்று கொண்டிருக்கின்றது.


 


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் ரீதியாக எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடிகர் சங்கம் அவருக்கு துணையாக நிற்கும் என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடிகர் சங்க தேர்தலின்போது விஷால் அணிக்கு முழு ஆதரவு கொடுத்தவர் கமல்ஹாசன். அதுமட்டுமின்றி விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட விண்ணப்பம் தாக்கல் செய்தபோது அந்த விண்ணப்பத்தை முன்மொழிந்தவர் கமல்தான். எனவே தனிப்பட்ட முறையிலும் தனக்கு ஆதரவாக இருந்த கமல்ஹாசனுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு உறுதுணையாக இருப்போம் என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் கூறியதில் வியப்பில்லை என்றே தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்