நடிகர் தனுஷ் கைவசம் இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 10க்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளார். இந்த படங்களுக்கு எலலாம் தேதிகளை பிரித்து பிரித்துக் கொடுத்து ஒவ்வொரு படமாக முடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது புதிதாக அவர் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் இயக்க உள்ளார்.
இவர்கள் இருவரும் மாரி, மாரி 2, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் எப்போது தொடங்கும் என்பது குறித்தும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.