இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் சுமார் பத்தாயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக டெல்லி மும்பை ஆகிய பகுதிகளில் மிக அதிகமான பாதிப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது