பாடல் கம்போஸிங் படத்தை வெளியிட்ட நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படக்குழு!

வியாழன், 13 ஜனவரி 2022 (15:26 IST)
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பாடல்கள் கம்போஸ் பணிக்காக படக்குழுவினர் லண்டனுக்கு சென்றிருந்தனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை படப்பிடிப்போடு தொடங்கியுள்ளதாம். மிகவும் எளிமையாக நடந்த இந்த பூஜையில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வதற்காக படக்குழுவினர் லண்டனுக்கு சென்றிருந்தனர். ஆனால் அங்கிருந்து திரும்பிய போது வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் சிகிச்சைக்குப் பிறகு இருவரும் இல்லம் திரும்பினர். இந்நிலையில் இப்போது பாடல் கம்போஸிங் செய்த புகைப்படத்தை இணையத்தில் படக்குழு பகிர்ந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்