நாளை வெளியாகிறது ஜோதிகாவின் ‘நாச்சியார்’ டீஸர்

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (19:02 IST)
ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீஸர் நாளை மாலை வெளியாகிறது.





பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பாலாவே தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர், நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. நடிகர் சூர்யா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த டீஸரை வெளியிடுகிறார். ஷூட்டிங் தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே பாலா இந்தப் படத்தை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்