விடுதலை வெற்றியை பக்காவாக பயன்படுத்திக் கொள்ளும் கலைப்புலி தாணு… மிஷ்கின் படம் தொடக்கம்!

வியாழன், 6 ஏப்ரல் 2023 (09:28 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். முக்கியமான ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவரின் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் போது விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக இப்போது இருவரும் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்த படம் பிப்ரவரியில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் நீண்டகாலமாக தொடங்கப்படாமல் இருந்தது.

இப்போது விஜய் சேதுபதியின் விடுதலை ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால், அதை பயன்படுத்திக் கொள்ள உடனடியாக இந்த படத்தை தொடங்க உள்ளாராம் தாணு. மே 15 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்