பிசாசு 2 ஷூட்டிங்குக்காக மிஷ்கின் தேர்வு செய்த இடம்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (10:20 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகளை இயக்குனர் மிஷ்கின் படமாக்கி விட்டாராம். இன்னும் கிளைமேக்ஸ் மற்றும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்படவில்லையாம். இந்த காட்சிகளுக்காக இயக்குனர் மிஷ்கின் திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்துள்ள வனப்பகுதிகளில் இதுவரை யாருமே படமாக்காத இடங்களை தேர்வு செய்து அதற்காக அனுமதி வாங்கும் முயற்சியில் உள்ளாராம். குணா படத்தின் அந்த குகைக் காட்சிகள் எப்படி பேசப்பட்டனவோ அதுபோல இந்த லொக்கேஷன்களும் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்