தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே மற்றும் நந்தலாலா உள்ளிட்ட பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் நடந்த பாட்டல் ராதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது படத்தைப் பற்றி பேசாமல் வேறு என்னென்னவோ பேசியும் சில இடக்கடக்கரலான வார்த்தைகளை வெளிப்படையாகப் பேசியும் முகம் சுளிக்க வைத்தார். அதே போல இளையராஜா பற்றி பேசும்போது அவரை ஒருமையில் பேசியிருந்தார். அது ஒரு அன்பின் வெளிப்பாடாக இருந்தாலும் மேடை நாகரிகம் கருதி அப்படி பேசியிருக்க வேண்டாம் என்ற கருத்துகளும் எழுந்தன. இதற்காக அவர் பின்னர் மன்னிப்பும் கேட்டார்.