பூஜையுடன் தொடங்கியது பிசாசு 2 ஷூட்டிங்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (11:42 IST)
மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படம் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார்.

இதையடுத்து இன்று சென்னையில் அந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்