இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இதனால் அவரவர் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர். நடிகர், நடிகைகளுக்கும் ஷூட்டிங் இல்லாததால் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர். அந்தவகையில் மைனா நந்தினி பவ்யமாக முகத்தை வைத்துக்கொண்டு "நானும் ரவுடி தான்" பாடலுக்கு டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ...