அடியே குண்டம்மா... இனி நீ தான் என் புட்டம்மா - இருந்தாலும் எங்களுக்கு பாண்டியம்மா தான் பிடிச்சிருக்கு!

திங்கள், 23 மார்ச் 2020 (17:33 IST)
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மைப்படுத்தி வெளியானது. அட்லீ இயக்கியிருந்த இப்படத்தின் நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் பெண்கள் கால்பந்து குழுவில் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகன் இந்திரஜா பாண்டியம்மா ரோலில் நடித்திருந்தார்.

பிகில் படத்தின் ஒரு காட்சியில் பெண்கள் அணியினர் சரியாக விளையாடததால் அவர்களை விஜய் திட்டுவது போல் காட்சி இடம்பெற்றிருந்தது. அதில் பாண்டியம்மா இந்திரஜாவை விஜய் குண்டம்மா.... குண்டம்மா என திட்டுவார் இதனாலே படத்தில் நடித்த மற்ற பெண்களை விட இந்திரஜா பெரிய அளவில் பிரபலமானார்.

இதையடுத்து அவரது அப்பா ரோபோ சங்கர் போலவே இந்திராஜாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியது. கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிக்க வைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது மேக்கப் போட்டு ஆள் அடையாளமே தெரியாத வகையில் டோட்டலாக சேஞ் ஆகியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குண்டம்மா புட்டம்மா போல் சூப்பர் ஆஹ் இருக்குற.... ஆனால் , எங்களுக்கு நார்மல் பாண்டியம்மா தான் பிடிச்சிருக்கு என கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Tq for the 100k family. I thank my Instagram followers from bottom of my heart. I need ur supports and blessings always. Love u guysssss. MUA & hairstylist & costume desinger & wardrobe @santhoshiplush

A post shared by Indraja_sankar (@indraja_sankar) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்