"எத்தனை ஜென்மம் எடுத்தாலும்" கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட மைனா நந்தினி!

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (15:25 IST)
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார். 
 
இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். 
 
முதல் திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கணவனை இழந்த மைனா சமீபத்தில் தான் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து மறுமணம் செய்துகொணடர். அழகான மறுவாழ்வை தனது கணவருடன் துவங்கியிருக்கும் மைனா தனது திருமணத்தில் தம்பி  ‘ரத்தத்தின் ரத்தமே’  என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், ”இந்த மாதிரி ஒரு தம்பி கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உன் கூடயே பொறக்கணும் ஐ லவ் யு பாலு” என குறிப்பிட்டிருக்கிறார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Very emotional movement my Thambi my soul my everything seriously I am very blessed intha mathiri oru Thambi kidachathuku yetthana jenmam yedutthalum nan unkudaiye than porakkakkanum I love u Balu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ @balasubramaniyanrajendran @momentousfotography @yogeshwaram_official @vijaytelevision @aranmanaikilivijaytv @rajendran5243 @call_me__rocky1996 @tamil_1998 @prasadinhere

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்