''என்னோட அண்ணன்..என்னோட தளபதி-''- இயக்குனர் அட்லி டுவீட்...வைரல் புகைப்படம்

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (21:52 IST)
இயக்குனர்  அட்லி பகிர்ந்துள்ள  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜவான். இப்படத்தில்ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன் தாரா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

இப்படத்தில், கேமியோ ரோலில்னடிகர் விஜய் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில்,  நேற்று அட்லி பிறந்த நாள் நிகழ்வில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும்   நடிகர் விஜய் ஆகிய இருவரும் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர்.

இதுகுறித்து, தன் டுவிட்டரில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ள அட்லி, என் பிறந்த நாளில் நான் வேறென்ன கேட்கப் போகிறேன். என் சிறந்த தூண்களான ஷாருக்கான், என்னோட அண்ணா என் தளபதி இருவரும் இருக்கிறார்கள் எனப் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தில் விஜய் டக் இன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்