காதர்பாட்சா தோல்வி… முத்தையாவின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல்!
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (08:33 IST)
விருமன் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் முத்தையா ஆர்யாவை கதாநாயகனாக்கி இந்த படத்தை இயக்க, ஜி ஸ்டுடியோஸ் பைனான்ஸில் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரிலீஸாகி மிக மோசமான வசூலைதான் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்த இந்த திரைப்படத்தை அடுத்து இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
காதர்பாட்சா திரைப்படத்துக்கு பிறகு முத்தையா அருண் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் முந்தைய படத்தின் தோல்வியால் இந்த படத்தின் பட்ஜெட் காரணமாக தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.