கமல்ஹாசன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லனாக நடிப்பதில்லை. எதிர்கதாநாயகனாக இந்தியன், ஆளவந்தான் உள்ளிட்ட சில படங்களில் தோன்றி இருந்தாலும், அந்த படங்களில் கதாநாயகனாகவும் அவரே நடித்திருந்தார். 2.0 படத்தில் கூட வில்லனாக நடிக்க வந்த அழைப்பை ஏற்க மறுத்தார்.
இந்நிலையில் இப்போது அவர் கல்கி 2898 ஏடி படத்தில் வில்லனாக நடிப்பதால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதி வரை நடக்கும் இதன் ஷூட்டிங்கில் கமல்ஹாசன் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. அவர் இப்போது அமெரிக்காவில் ஓய்வில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.