தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பு முடித்த நடிகர் முத்துக்காளை: குவியும் வாழ்த்துக்கள்

திங்கள், 25 டிசம்பர் 2023 (17:48 IST)
தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான முத்துக்காளை தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பு முடித்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
நடிகர் முத்துக்காளை, வடிவேல் நடித்த பல படங்களில் அவருடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. அவரது காமெடிக்கு என தனிமையாக ரசிகர்கள் உள்ளனர் 
 
இந்த நிலையில் காமெடி நடிகர் முத்துக்காளை ஏற்கனவே இரண்டு பட்டங்கள் பெற்ற நிலையில் தற்போது  தமிழ் இலக்கியத் தேர்வில் (B.Lit) முதல் நிலை பெற்று பட்டம் பெற்றார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
நடிகர் முத்துக்காளை கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ் வரலாற்றில் பட்டமும், 2019ஆம் ஆண்டு எம்.ஏ தமிழ் பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்