சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்! – ஒரே நாளில் 14 பேர் பாதிப்பு!

ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (11:18 IST)
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளது.



கடந்த 2019ம் ஆண்டு இறுதி வாக்கில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிர்களை இழக்க செய்தது. தற்போது தடுப்பூசிகள், பொது கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பல பகுதிகளில் கொரோனா வேரியண்டுகளின் பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது. பல பகுதிகளிலும் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பரவல் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 14 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருவருக்கும், செங்கல்பட்டு, பெரம்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஒருவருக்கும் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்த 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 123 ஆக உள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்