முத்தையாவின் அடுத்த பட ஹீரோ விஷாலா? ஆர்யாவா?

செவ்வாய், 29 மார்ச் 2022 (18:48 IST)
பிரபல இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாகவும் ஒரு செய்தி இணைய தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன 
 
ஆனால் முத்தையாவின் அடுத்த படத்தில் விஷால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 

ஏற்கனவே முத்தையாவின் இயக்கத்தில் விஷால் ’மருது’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் மீண்டும் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்