விஜய் 65 படத்தில் இருந்து வெளியேறிய முருகதாஸ் – அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (15:28 IST)
நடிகர் விஜய் இயக்கும் அடுத்த படத்தில் இருந்து ஏ ஆர் முருகதாஸ் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த படம் பொங்கலுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக முருகதாஸ் சொன்ன கதையில் இடைவேளைக்குப் பின் வரும் பகுதிகளில் தனக்கு முழு திருப்தி இல்லை என விஜய் சொன்ன நிலையில் அதற்காக கதையை மீண்டும் திருத்தி எழுதி போய் கூறியுள்ளார் முருகதாஸ். ஆனால் அப்போதும் விஜய்க்கு முழு திருப்தி இல்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தில் இருந்து ஏ ஆர் முருகதாஸ் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை. தயாரிப்பு நிறுவனத்துடனும் விஜய்யுடனும் முருகதாஸுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என சொல்லப்படுகிறது.

Source வலைப்பேச்சு

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்