முந்தானை முடிச்சு படம் மூலம் காமெடி நடிகரான அறிமுகமாக நடிகர் தவக்களை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 42.
1983ம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படம் மூலம் நடிகர் ஆனவர் தவக்களை. ஆள் குள்ளமாக இருந்தாலும் நடிப்பில் அசத்தி ரசிகர்களின் மனதில் உயர்ந்தவர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. முந்தானை முடிச்சு படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘தவக்களை’. பின்னாளில் அதுவே அவரின் பெயராக நிலைத்துவிட்டது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அவர் சென்னை வடபழனியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிர் பிரிந்தது.