பிரபல தொலைக்காட்சியில் விஜய் சேதுபதி நடித்த மும்பைகார் திரைப்படம் ஒளிபரப்பு!

வெள்ளி, 3 நவம்பர் 2023 (14:09 IST)
சில ஆண்டுகளுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷான், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் மாநகரம். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் முனீஸ் காந்த் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரிய வெற்றி பெற்ற ’மாநகரம்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முனீஸ்காந்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார்.

இந்த படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானாலும் பிளாப் ஆனது. இதனால் விஜய் சேதுபதியின் முதல் பாலிவுட் படமே தோல்விப் படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படம் இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

நவம்பர் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மும்பைகார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்