பிரபல தயாரிப்பாளரின் மகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

திங்கள், 6 ஏப்ரல் 2020 (20:06 IST)
பிரபல தயாரிப்பாளரின் மகளுக்கு கொரோனா
ஷாருக்கான் நடித்த ’சென்னை எக்ஸ்பிரஸ்’ உள்பட பல பாலிவுட் வெற்றிப் படங்களை தயாரித்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி. இவருடைய மகளும் நடிகையுமான ஷாஜியா என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை திரும்பினார். இதனை அடுத்து அவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை திரும்பிய ஷாஜியாவுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் நேற்று திடீரென அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக ஷாஜியா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
அதுமட்டுமின்றி அவரது வீட்டில் உள்ள 9 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மும்பையின் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகளுக்கே கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்