காலை தூக்கி மேலே போட்ட அபிராமி! "குரங்அஜார்" என்று எச்சரித்த முகன்!

வியாழன், 18 ஜூலை 2019 (11:50 IST)
பிக்பாஸ் வீட்டிலில்  அபிராமி முகன் நல்ல நண்பர்களாக இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சமீபத்தில் கூட அனைவர் முன்னிலையில் முகனுக்கு ஐலவ்யூ சொல்லி இருந்தார். இதனால் இவர்களின் நட்பு கொஞ்சம் ஓவராக தான் போகிறதோ என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி கிண்டலடித்து வந்தனர். 


 
இந்நிலையில் முகன் அபிராமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நேற்றைய நிகழ்ச்சியில் முகன், சாண்டி, தர்ஷன், கவின் ஆகியோர் லிவ்விங் ஏரியாவில் இருக்கும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்து அமர்ந்த அபிராமி , முகன் மீது இரண்டு காலையும் மேலே போட்டு சேரில் சாய்ந்து ஒய்யாரமாக அமர்ந்தார். இதனால் சட்டென கொஞ்சம் கடுப்பான முகன் அபிராமியை பார்த்து "குரங் அஜார்" என மலாய் பாஷையில் திட்டினார். 


 
அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியாத அபிராமி திருத்திருன்னு முழித்தார் பின்னர் மீண்டும் முகன் "குரங் அஜார்" என கடுப்பாகி கத்த, அபிராமி முகன் மீது போட்ட காலை சடாலென்று எடுத்திட்டு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஓடிவிட்டார். "குரங் அஜார்" என்றால் மலாய் மொழியில் மரியாதை குறைவாக நடப்பது என்று அர்த்தமாம்.


 
என்ன தான் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அத்தனை பேர் முன்னிலையில் அபிராமியின் செயலால் முகன் கொஞ்சம் எரிச்சலாகிவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mugen saying "kurang ajar" and Sandy singing about it is the highlight of the week

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்