பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாகவும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளராகவும் வலம் வருபவர் தர்ஷன். யாருடைய வெறுப்புக்கும் ஆளாகாமல், அநியாயத்தை தட்டிக்கேட்கும் நபராக எல்லோருடைய மனதையும் ஈர்த்துவிட்டார்.
அதனை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவர், நான் யாரை சந்தித்தேன் என்று பாருங்கள். இன்றைய தலைமுறையினருக்கு டிரெண்ட்செட்டிங்காக இருக்கும் படங்களை அவ்வப்போது அளிக்கும் தி ஒன்ட் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார். சிம்புவின் அறிவை பார்த்து வியந்துவிட்டேன். சினிமா முதல் வாழ்க்கை வரை அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார். உங்களை சந்தித்ததில் பெருமையாக உள்ளது டியர் சிம்பு என்று தெரிவித்து நெகிழ்ச்சியுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் , பிக்பாஸ் வீட்டில் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் தர்ஷன் தனது காதலனாக கிடைத்ததை எண்ணி பெருமையடைகிறேன். ஆனால், வீட்டில் இருப்பவர்களோ தர்ஷனின் பெயரை கெடுக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமான மீரா. தர்ஷனிடம் யாரும் வாலாட்ட முடியாது என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார் சனம் ஷெட்டி.