எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மான்ஸ்டர். நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தை பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மான்ஸ்டர் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் எஸ்.ஜெ சூர்யா, நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதை தான் நாயகன். எனவே அனைத்து திரையரங்கிலும் தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.