ராயல்டி தொடர்பான பிரச்சனையால் எஸ்.பி.பி மற்றும் இளையராஜாவுக்கு இடையில் மனஸ்தாபம் உருவானது. இதற்கிடையில், பாடகர் எஸ்.பி.பி., திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்கள்.
இந்நிலையில், அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை பாடியுள்ளது குறித்து இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதையடுத்து தான் இனிமேல் இளையராஜா பாடல்களைப் பாடமாட்டேன் என எஸ்.பி.பி தெரிவித்தார்.