இயக்குனராக மோகன்லாலின் முதல் படம்… பரோஸ் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

vinoth

வெள்ளி, 13 டிசம்பர் 2024 (08:27 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்கும் முதல் படமாக ‘பரோஸ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளிப்போய் அவ்வப்போது படப்பிடிப்பு நடந்து வந்தது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்கும் முதல் படமாக ‘பரோஸ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளிப்போய் அவ்வப்போது படப்பிடிப்பு நடந்து முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் டிரைலர் டிசம்பர் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்துக்கு இந்திய அளவில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்