அனுமதி பெறாமல் காப்பி அடிக்கப்பட்டதா ‘விடாமுயற்சி’?... ஹாலிவுட் நிறுவனம் பல கோடி கேட்டு நோட்டீஸ்?

vinoth

செவ்வாய், 3 டிசம்பர் 2024 (09:04 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.

படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் டீசர் ரிலீஸானபோது அதன் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கல் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் என்ற படத்தின் ரீமேக் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டீசரைப் பார்க்கும்போதும் அது உறுதியாகியுள்ளது. ஆனால் இந்த படத்தை முறையான அனுமதி பெறாமல் எடுத்து வருவதாகவும் அது சம்மந்தமாக பேரமவுண்ட் பிக்சர்ஸ் எனும் ஹாலிவுட் ஸ்டுடியோ லைகா நிறுவனத்துக்கு பல கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்