நலிவடைந்த நடிகர்களுக்காக ஒரு படம்: ஒரே படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்!

திங்கள், 8 பிப்ரவரி 2021 (20:42 IST)
நலிவடைந்த நடிகர்களுக்காக ஒரு படம்
நலிவடைந்த நடிகர்களுக்காக உதவும் வகையில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் அந்த திரைப்படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இணைந்து நடித்த போதிலும் அதன் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே படத்தில் நடிக்காமல் இருந்தனர் 
 
இந்த நிலையில் மலையாள திரையுலகில் உள்ள நலிந்த நடிகர்களின் நலனுக்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளனர் 
 
இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் சம்பளம் வாங்காமல் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் கிடைக்கும் லாபம் முழுவதும் நலிவடைந்த கலைஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
நலிவடைந்த கலைஞருக்காக இரு சூப்பர் ஸ்டார்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டதை அடுத்து மலையாள திரையுலகம் இருவரையும் பாராட்டி வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்