டிரீட்மெண்ட் கொடுத்தா மட்டும் கொரோனா குணமாகிடுமா ? திரௌபதி இயக்குனரின் குதர்க்கக் கேள்வி!

திங்கள், 6 ஏப்ரல் 2020 (16:12 IST)
திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் விளக்கு ஏற்றுவதற்கு ஆதரவு தெரிவித்து கொரோனா குறித்து குதர்க்கமானக் கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி ஏப்ரல் 5 (நேற்று) இரவு 9 மணிக்கு மின்விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றும்படியும், டார்ச் லைட் அடிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதன் படி நேற்று இந்தியா முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்தனர். ஆனால் அதுமட்டும் இல்லாமல் பட்டாசுகளை வெடித்தல் மற்றும் கூட்டமாக சேருதல் ஆகிய வேண்டதகாத செயல்களையும் செய்தனர்.

இந்நிலையில் விளக்கு ஏற்றியது குறித்து சமூகவலைதளங்களில் சில எதிர்க்கருத்துகள் எழுந்தன. இந்நிலையில் சமூகவலைதளத்தில் கார்த்திக் என்பவருக்கும் திரௌபதி இயக்குனர் மோகன் என்பவருக்கும் இடையிலான உரையாடல் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதில் கார்த்தி என்பவர்’ ஏன் விளக்கு ஏற்ற சொன்னார்கள் என்று கேட்கிறேன். யாருமே பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். விளக்கேத்துனா கொரோனா போயிடுமா?’ எனக் கேள்வி எழுப்ப, அதற்கு திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ‘அப்ப டிரீட்மெண்ட் கொடுத்தா மட்டும் குணமாயிடுமா?’ என்று குதர்க்கமாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.அது சம்மந்தமான ஸ்க்ரீன்ஷாட் சமூகவலைதளங்களில் பரவி மோகனை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இதையடுத்து மோகனைக் கேலி செய்யும் விதமாக அந்த பதிவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்