நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த் இரங்கல்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (08:00 IST)
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது. இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
 
நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். திரையுலகில் அறிமுகமாகி பைரவி, தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்க முடியாத பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் 
 
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் நண்பர் ஸ்ரீகாந்தின் மறைவுக்கு வருந்துகிறேன் என்று கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
 
சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் ரஜினிகாந்துடன் பைரவி உள்பட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்