கேஜிஎஃப் ராக்கி பாயோடு கொஞ்சம் அர்ஜுன் ரெட்டியை கலந்து..! – அனிமல் ட்ரெய்லர் ரியாக்‌ஷன்!

வியாழன், 23 நவம்பர் 2023 (16:43 IST)
இந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளில் பெரிய பட்ஜெட்டில் தயாரானாலே பேன் இந்தியாவாக தயாரிக்கப்படும் படங்களின் வரிசையில் அடுத்ததாக களம் இறங்குகிறது ரன்பீர் கபூர் நடித்த அனிமல்.



தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி என்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர் சந்தீப் ரெட்டி வாங்கா. அதே கதையை மீண்டும் இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்து அதையும் ஹிட் அடித்தார். இதனால் தனக்கு ஏற்பட்டுள்ள இந்தி பட வாய்ப்பை கொண்டு தற்போது அவர் இயக்கி இருக்கும் படம்தான் அனிமல்.

பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர், அவருக்கு அப்பாவாக அனில் கபூர், நாயகியாக ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என பேன் இந்தியாவை ப்ளான் செய்து தயாராகியுள்ள இந்த படத்தின் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி ட்ரெய்லர்களும் தற்போது வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டியில் விஜய் தேவரகொண்டாவிடம் இருந்த அதே கோபம், சோகம், வேகம் எல்லாம் ரன்பீர் கபூருக்கும் பொருந்தி போகிறது. முழுக்க தந்தை மகன் இடையேயான பாசம் மற்றும் பிரச்சினைகளை மையப்படுத்திய ஆக்‌ஷன் படமாக இதை எடுத்துள்ளனர். சிறுவயதிலிருந்து தன்னை தன் அப்பா எப்படி நடத்தினார் என தன் அப்பாவிடமே நடித்துக் காட்டும் காட்சிகளில் ரன்பீர் கபூர் நடிப்பு பிரமாதம். சந்தோஷ் சுப்ரமணியம் ஜெயம் ரவி போல அப்பா சொல்வதையே வேதவாக்காக கொண்டு அவருக்கு பிடித்த மகனாக இருக்கு விரும்பும் ரன்பீர் கபூர். தனது தந்தையை கொல்ல மர்ம நபர் ஒருவர் முயற்சிக்கவும் அனிமல் ஆகிவிடுகிறார்.

படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மாஸ் ஹீரோவுக்கு தேவையான அதிரடிகளோடு அமைந்துள்ளன. கேஜிஎஃப், விக்ரம் படங்களில் வரும் பெரிய சைஸ் மிஷின் கன் போல இதிலும் ஒரு கன்னை வைத்து ரன்பீர் கபூர் சுடும் காட்சிகள் உள்ளன. மொத்தமாக செண்டிமெண்ட் மற்றும் ஆக்‌ஷன் கலந்த படமாக இருக்கும் இது தற்போதைய ஆக்‌ஷன் கதை விரும்பிகளிடையே வரவேற்பை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் ஆக்‌ஷன் விரும்பிகளிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.
Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்