இளைஞரணி செயலாளராக 5 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அமைச்சர் உதயநிதி ! புதிய அறிவிப்பு

புதன், 5 ஜூலை 2023 (21:06 IST)
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வாய்த்துள்ளார். இந்த நிலையில், திமுக இளைஞரணி மாவட்ட-மாநகர அமைப்பாளர்/ துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

திமுக கட்சியின் இளைஞரணி செயலாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் தேதி நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்வானார். அதன்பின்னர், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானார்.

சமீபத்தில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

திமுகவின் இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்து  ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு திமுகவினர் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து அமைச்சர் உதய நிதி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில்  திமுக இளைஞரணி மாவட்ட-மாநகர அமைப்பாளர்/ துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியரின் கொள்கை வழியில் பயணித்து நம் கழகத் தலைவர்  முக.ஸ்டாலின்  அவர்களின் கரத்தை வலுப்படுத்த தொடர்ந்து உழைப்போம். அனைவருக்கும் வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் @dmk_youthwing மாவட்ட-மாநகர அமைப்பாளர்/துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியரின்… pic.twitter.com/8LOmB7NZYh

— Udhay (@Udhaystalin) July 5, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்