அந்த வேலையை ஆண்கள் தான் செய்ய வேண்டும்: காஜல் அகர்வால் அதிரடி

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (10:25 IST)
ஆண்களும் வீட்டில் உள்ள வேலைகளை செய்ய வேண்டும் எனவும், தன்னுடைய காதலர் சாதாரணமானவராக இருந்தாலே போதும் எனவும் பிரபல நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.


 
 
தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் சம்பாதிப்பதால் வீட்டு வேலைகளை ஆண்களும் செய்ய வேண்டும். பழைய காலத்தை போல் இல்லாமல், வீட்டு நிர்வாகத்தையும் ஆண்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
பெண்கள் சம்பாதிக்கவும் வேண்டும், வீட்டையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? பெண்கள்தான் எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும் என கூறும் ஆண்களை தனக்கு பிடிக்காது எனவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
 
மேலும் கூறிய அவர், தான் ஒரு சினிமா நடிகையாக இருந்தாலும், ஒரு சாதாரண பெண் தான். மற்ற எல்லா பெண்களுக்கு இருக்கும் அனைத்து ஆசைகளும் எனக்கு உண்டு. என்னுடைய காதலர் சாதாரணமானவராக இருந்தால் போதும், அரசகுமாரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்