பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய போட்டியாளர் இவர்தான்!

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (22:55 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே அபிராமியின் காதல், சேரன் - பாத்திமாவின் மோதல் ஆகியவற்றுடன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது
 
இந்த நிலையில் இன்றைய புரமோவில் இன்று ஒரு புதியபோட்டியாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அவர் நடிகை மீராமிதுன் என்பது தெரிய வந்துள்ளது. இவர் '8 தோட்டாக்கள்' மற்றும் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்ற இவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும் நல்ல தமிழில் பேசக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்