பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆன பின்னரும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருப்பவர் மீராமிதுன் என்பது தெரிந்ததே. அவர் தனது டுவிட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதும் அந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் ஆபாசமாக மாற்றி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது
இந்த நிலையில் சற்று முன்னர் மீராமிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மணக் கோலத்தில் உள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இந்த மணக்கோலம் விரைவில் நிஜமான கோலமாக மாற இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
இந்த வீடியோ குறித்து கருத்து கூறிய நெட்டிசன்கள் மீரா மிதுனை திருமணம் செய்யப்போகும் துரதிஷ்டசாலி யார் என்று கேலியும் கிண்டலுமாக பதிவு செய்து வருவதால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது