அவரை பார்த்ததும் என் இதயமே நின்னு போச்சு: நடிகை மீனா

Webdunia
ஞாயிறு, 17 மே 2020 (19:26 IST)
குழந்தை நட்சத்திரத்திலிருந்து திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை மீனா கடந்த 2000ம் ஆண்டுகளில் ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார். ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி மீனாவின் மகள் நைனிகா ’தெறி’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் ஹிருத்திக் ரோஷனுக்கு கை கொடுப்பது போல் உள்ளது. பெங்களூரில் நடந்த ஒரு திருமணத்தின் போதுதான் முதன்முதலாக ஹிருத்திக்கை சந்தித்ததாகவும் தனது விருப்பத்துக்குரிய நடிகரை எதிர்பாராமல் திடீரென சந்தித்தபோது தனது இதயமே நின்றுவிட்டது போல் உணர்ந்ததாகவும், தனது மலரும் நினைவுகளை குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்