ஏற்கனவே நந்திகிராம் பகுதியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து உள்ள மம்தா பானர்ஜி, நேற்று அந்த பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த டீ கடைக்குச் சென்று டீ குடிக்க முடிவு செய்த அவர், அதிரடியாக டீ கடைக்குள் நுழைந்து தானே மாஸ்டராக மாறி டீ தயாரித்தார்
தனக்கு மட்டுமின்றி தன்னுடன் வந்த அனைவருக்கும் டீ தயாரித்துக் கொடுத்த மம்தா பானர்ஜி, அதன்பின் டீக்கடைக்காரரிடம் தான் குடித்த டீக்கு பணமும் கொடுத்து விட்டு சென்றார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன