’’அந்தக் கண்ண பாத்தாக்க.’’.. மாஸ்டர் பட 4 வது புரோமோ ரிலீஸ் !!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (18:16 IST)
விஜய்யின் மாஸ்டர் படத்தின் மாஸ்டர் படத்தில் 3 வது புரோமோ நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில் தற்போது இப்படத்தில் 4 வது புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையேற்ற தமிழக அரசு சமீபத்தில் திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறக்காத நிலையில் தியேட்டர்கள் திறப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரும் 11 ஆம் தேதி வரை 50% அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.

இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சாந்தனு,அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது, மேடையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடிகர் சாந்தனு மற்றும் அனிருத் இணைந்து நடனம் ஆடினர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது, மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள , அனிருத் இசையமைப்பில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள அந்தக் கண்ணப் பார்த்தாக்க என்ற பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.

இதை ரசிகர்கள் கொண்டாடி வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்