சந்தோஷ் நாராயணனை விட்டு விலகிய மாரி செல்வராஜ்… காரணம் பா ரஞ்சித்தா?

vinoth

திங்கள், 6 மே 2024 (15:36 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியானது. படத்துக்கு பைசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

போஸ்டரில் காளமாடன் என்ற கடவுளின் கீழ் துருவ் விக்ரம் இருப்பது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக மாரி செல்வராஜோடு கூடட்ணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.

வழக்கமாக மாரி செல்வராஜின் அனைத்து படங்களுக்கும்(மாமன்னன் தவிர) சந்தோஷ் நாராயணன்தான் இசையமைப்பார். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துக்கும் அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்துள்ள நிலையில் இந்த படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்